அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம், ஆலோசனை நடத்தியது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அண்ணா திமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என கூறப்படுகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும், துணை ராணுவ படை பாதுகாப்பு அளிக்கவும், தேர்தல் ஆணையத்திடம் அண்ணா திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா திமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் இதனை தெரிவித்தார்.

Exit mobile version