புதிய மின் பாதைகள் அமைத்தால் மட்டுமே மின்மிகை மாநிலம் உருவாகும்: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் புதிய மின் பாதைகள் அமைத்தால் மட்டுமே, எதிர்காலத்திலும் மின்மிகை மாநிலம் என்ற நிலையை தொடர முடியும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள உப்புபாளையம் பகுதியில், புதியதாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தின் மதிப்பு 8 கோடியே 97 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்நிலையில், துணை மின் நிலையத்தின் சோதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விடாமல் தடுக்க, சில எதிர்க்கட்சிகள் மற்றும் சில கட்சிகள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version