உயர்வுடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை மதிப்பு உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று காலை நிலவரப்படி 40 ஆயிரத்து 492 புள்ளிகளாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 11 ஆயிரத்து 935 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8 ஆயிரத்து 656 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 239 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 871 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 13 ஆயிரத்து 166 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 23 ஆயிரத்து 437 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 504 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 911 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version