விழுப்புரத்தில், தமிழ்நாடு நீடித்த மானாவாரி இயக்கம் மற்றும் வேளாண்துறை சார்பில் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள பூண்டி கிராமத்தில், பனை விதைகள் நடவு செய்யும் பணியினை வேளாண் துறை இயக்குநர் தொடங்கி வைத்தார். அரசு சார்பில் வழங்கப்பட்ட கருவியைக் கொண்டு தென்னை மரம் ஏறும் விவசாயிகளைப் பார்வையிட்ட பின் விவசாயிகளுக்குப் பனை விதைகள் மற்றும் விவசாய இடுபொருள்களை வழங்கினர். இந்தத் திட்டத்தின் மூலம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரம் பனை விதைகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இரண்டரைக் கோடி பனை விதைகள் நடத் திட்டமிட்டு, தற்போது ஒரு கோடியே 80 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.