தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொரோனா தொற்று பரவலால் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 10 மாதங்களுக்குப் பின்னர், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வந்த மாணவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் மாணவர்கள் பாதுகாப்பான இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த உணவை பரிமாறக்கூடாது என்றும், பள்ளிவளாகத்திற்கு ஒன்றுகூடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் வரும் மாணவ, மாணவிகள் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து, பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதித்தனர்.