கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் டிசம்பர் 8,10 மற்றும் 14ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 15 ஆயிரத்து 962 வார்டுகள், 152 பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில், 76 புள்ளி 4 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில், பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் உள்ளன.