சமூகவலைதளங்களில் விளம்பரங்களை தவிர்த்த ஸ்டார்பக்ஸ்!

பிரபல காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு போராடுவோரை சமூக விரோதிகள் என்றும், சூறையாடுதல் தொடங்கினால்,துப்பாக்கிச் சூடும் தொடங்கும் என்பன போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்துகளை தனது தளத்தில் அனுமதிப்பதால், பேஸ்புக் நிறுவனம் பலரது அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. வெறுப்பு கருத்துகளை அனுமதிப்பதை நிறுத்தக் கோரி #StopHateForProfit என்னும் ஹேஷ்டேக்கும் பகிரப்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்நிலையில் பிரபல காஃபி நிறுவனமான ஸ்டார் பக்சும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த அறிவிப்பு கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூபுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version