ஈரோட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பிற்காக சாலைகளை ஆக்கிரமித்து மேடைகள் அமைத்ததுடன், அப்பகுதியில் உள்ள கடைகளையும் வற்புறுத்தி அடைத்ததால் அப்பகுதிமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு முனிசிபல் காலனியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலையை மு.க.ஸ்டாலின் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனையொட்டி முனிசிபல் காலனி பகுதிக்கு செல்லும் சாலைகளை ஆக்கிரமித்து முன் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டாலின் வருகையால் முனிசிபல் காலனி பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தையும் திமுகவினர் வற்புறுத்தி அடைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களின் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதுடன் தங்களின் அன்றாட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்