இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒரே நாடு ஒரே தேர்தல்… பீதியில் திமுக!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய சிறப்பு குழு ஒன்றை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நியமித்து இருக்கிறது மத்திய அரசு …..இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து உச்சகட்ட பீதியில் இருக்கின்றனர் ஸ்டாலினும் திமுக உடன் பிறப்புகளும் என்பது தான் அறிவாலயத்தின் இன்றைய ஹாட் டாப்பிக்கே…..

ஸ்டாலினும், உபிக்களும் ஏன் பீதியில் இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்…. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலோடு சேர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தலாம் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது…..திமுகவினர் பீதியடைய இதுதான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….

தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலை தரப்போகிறோம் என்று ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரம் போல ஏக வசனங்கள் பேசியும் ப்ரொமோஷன் வீடியோ எல்லாம் போட்டு மக்களை திசை திருப்பி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு, தான் போட்ட நாடகங்களுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படாதா என்ன?

இந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் தந்தாரா ஸ்டாலின் என்ற கேள்வியைக் கேட்டால், கொந்தளித்து கரித்துக்கொட்டுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்… கொலை, கொள்ளை, கஞ்சா என தமிழ்நாட்டை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த சாதனையே…

ஸ்டாலினின் கொடூர ஆட்சியைப் பற்றி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கூட பல முறை பேசியிருக்கிறார்…

வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டியே அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் மீதான ரெய்டுகள், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்று வரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருப்பது, 3 அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணை என்று விழிபிதுங்கி நிற்கும் விடியா அரசின் பொம்மை முதல்வரான ஸ்டாலினுக்கு, தற்போது இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சியே கலைந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே தனது பயத்தை ஸ்டாலின் வெளிக்காட்டியிருந்த நிலையில், அது எல்லாம் உண்மையாகிவிடுமோ என்கிற அச்சம் திமுகவினருக்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வரும் 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் விடியா திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருமா? தமிழ்நாட்டில் ஆட்சி கலையும் என்பதை கணித்து தான் தேசிய அரசியலிலாவது கால் பதித்துவிட முடியுமா என்கிற ஆர்வத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஸ்டாலின் பங்கேற்றிருக்கிறாரா?
அப்படி ஒருவேளை தேர்தல் நடந்தால், புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியே தீருவோம் என்று உறுதியுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதுதான் நிதர்சனம்.

Exit mobile version