இந்த விளம்பர மோகம் எங்கே கொண்டு போகப் போவுது C.M.சார்!

 

காலை சிற்றுண்டி திட்டத்த தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்துனதா சொல்லி தமிழ்நாட்டுல வெளியாகுற அத்தன பேப்பர்லயும் கொட்ட எழுத்துல விளம்பரம் கொடுத்துச்சு இந்த விடியா திமுக அரசு… அதுமட்டுமில்லாம டெல்லி, மும்பையில வெளியாகுற நவபாரத் டைம்ஸ்ங்கிற இந்தி பத்திரிகைக்கும் அந்த விளம்பரத்த இந்தியில முதப்பக்கத்துல கொடுத்துருக்காங்க… அதாவது ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாண்டி அந்த விளம்பரத்த கொடுத்துருக்காங்க… கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கதையா, இப்படி மக்களோட வரிப்பணத்துல இஷ்டத்துக்கு விளம்பரம் கொடுத்து தங்களோட விளம்பர வெறிய தீர்த்துக்கிட்டு இருக்கு திமுக… எதுக்காக மும்பை வரைக்கும் விளம்பரம் போச்சுன்னா… இப்ப INDIA கூட்டணி சார்பா மும்பையிலதான் மூனாவது மீட்டிங் போட்டிருக்காங்க. அதுல ஸ்டாலினும் கலந்துக்கிட்டு இருக்காரு… ஏற்கனவே பீகார், பெங்களூரு கூட்டங்கள்ல போயி பெருசா விளம்பரம் தேட முடியல… அதனால மும்பை கூட்டத்துல கலந்துக்கிற ஸ்டாலின அங்க உள்ளவங்க அடையாளம் தெரிஞ்சிக்கிடணும்னு… யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேங்கிறமாதிரி… முதல்லயே ஸ்டாலின் விளம்பரம் செஞ்சிக்கிட்டாரு போலன்னு நாங்க சொல்லலங்க… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

Exit mobile version