தினந்தோறும் பொய் அறிக்கைகளை வெளியிடுவதே ஸ்டாலினின் வாடிக்கை – முதலமைச்சர் விமர்சனம்

5 மாதங்களாக வீட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஸ்டாலின், அதிமுக அரசை வேண்டுமென்றே குறை கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டால் சேலம் மாவட்டத்தில் 26 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக கூறினார். கடந்தாண்டில் 6 மாணவர்கள் மட்டும் மருத்துவம் பயில தேர்ச்சி பெற்றதாக கூறிய முதலமைச்சர், தற்போது உள்ஒதுக்கீட்டால் அந்த நிலை மாறியுள்ளதாக கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல் லாம் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளவதாக கூறிய முதலமைச்சர் அவருக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம் சரியாக பொருந்தும் என விமர்சனம் செய்தார். மக்களை சந்திக்காமல் தினந்தோறும் பொய் அறிக்கைகளை வெளியிடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் அளவிற்கு ஊழல் செய்த கட்சி என்றால் அது திமுக தான் எனக் விமர்சித்த முதலமைச்சர், 2ஜி ஊழல் காரணமாக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே, திமுக மீது நடவடிக்கை எடுத்தது விந்தையானது என்று தெரிவித்தார்.

Exit mobile version