ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: அன்புமணி ராமதாஸ்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், ஸ்டாலினின் கனவு நினைவாகாது என்றும் விமர்சித்தார். மக்களுக்கு திமுக மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாவும், ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Exit mobile version