ஸ்டாலினின் நடவடிக்கை தமிழக மக்கள் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கை தமிழக மக்களை எள்ளி நகையாடும் வகையில் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்று தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை, நதிநீர் பிரச்னை ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப்படலாம் என்றும்,  கொரோனா பாதிப்பு என்பது மருத்துவம் தொடர்பான பிரச்னை என்பதால், அரசு நிர்வாகம் மற்றும் மருத்துவர்களுடன்தான் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். மு.க.ஸ்டாலின் இதனை விமர்சிப்பது வேடிக்கையான விந்தையான விஷயம் அமைச்சர் விமர்சித்தார்.

Exit mobile version