நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதாரித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுய லாபத்திற்காக தனது தந்தையை வீட்டு சிறையில் அடைத்தவர் தான் இந்த ஸ்டாலின்” என குற்றம்சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதிக்கு உண்டான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதல்வர், கருணாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் பிழைத்திருப்பார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், இரண்டு ஆண்டு காலம் கருணாநிதியை வீட்டு சிறையில் ஸ்டாலின் வைத்துள்ளதாகவும், தனது தந்தையை ஸ்டாலின் கொடுமை படுத்தியுள்ளதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார். மேலும், கருணாநிதி சிகிச்சை குறித்து
திமுகவினரே குற்றம்சாட்டி வருவதாக முதல்வர் கூறினார்.
இது குறித்து எமது அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய முதல்வர், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.