நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாரக் கூட்டங்களில் மோடியை கடுமையாக வசைபாடிய மாற்று கட்சித் தலைவர்களுக்கு கூட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் போது, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படாதது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.