சட்டையைக் கிழித்துக்கொண்டு விளம்பரம் தேடுவதில் ஸ்டாலின் வல்லவர் – முதலமைச்சர் பிரசாரம்

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வார காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக,கரூர் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக, புதுக்கோட்டையில் வாக்குசேகரித்த முதலமைச்சர், சட்டப்பேரவையில் அராஜகத்தில் ஈடுபடும் திமுகவினர் ஒழிய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார். மேலும்,சட்டையைக் கிழித்துக்கொண்டு விளம்பரம் தேடுவதில் ஸ்டாலின் வல்லவர் என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

மாத்தூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து பேசிய முதலமைச்சர், மக்களுக்குச் சேவை செய்ய, தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது அதிமுக கூட்டணி என்றார்.

Exit mobile version