பூஜை புனஸ்காரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்த நிலையில், அவரது மகன் உதயநிதி, பயபக்தியோடு, திரைப்பட பூஜை ஒன்றில் கலந்து கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆன்மீகவாதிகளை எள்ளி நகையாடி வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் உயிருடன் இருந்தபோதே அவரது வீட்டிற்கு வந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் காலில், சாஸ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். மற்றொரு புறம் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, நாடுமுழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று ஸ்டாலினின் உடல்நலத்திற்காக சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்.
இதையெல்லாம் கண்டும் காணாமல், இருந்து வரும் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இந்து வேத முறை திருமணங்களை கடுமையாக கிண்டல் செய்து பேசினார். அந்த வீடியோ அண்மையில் வைரலான நிலையில், ஸ்டாலினுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படம் ஒன்றின் பூஜையில் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் பயபக்தியுடன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலில் தனது மகனிடம் கொள்கையை சொல்லட்டும் என சமூக வலைதளவாசிகள் சாட்டை வீசி வருகின்றனர்.