முதலமைச்சர் குறித்து அவதூறு வழக்கு: மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் மார்ச் 8-ந் தேதி நேரில் ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 மதகுகள் உடைந்தன. தடுப்பணையில் இடிந்த பகுதிகளை பார்வையிட்ட ஸ்டாலின், அணைகள் பாதுகாப்பு விவகாரம் குறித்து விமர்சித்து இருந்தார்.

முதலமைச்சர் குறித்தும், அரசு குறித்தும் தரக்குறைவாக விமர்சித்த ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராகாததை தொடர்ந்து, மார்ச் 8 ஆம் தேதி ஸ்டாலின் நிச்சயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version