ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது தாழ்ந்த தரத்தை காட்டுகிறது : அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர் குறித்து பண்பற்ற முறையில் அறிக்கை வெளியிடும் ஸ்டாலினுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது தாழ்ந்த தரத்தை காட்டுவதாகவும், ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாடியுள்ளார். மருத்துவ பட்டமேற்படிப்பில் ஒபிசி பிரிவிற்கு இடஒதுக்கீடு பெற, அதிமுக அரசு தவறாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்போதுதான் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெறுவதாகவும், திமுக பறிகொடுத்த தமிழகத்தின் உரிமைகளை, ஒவ்வொன்றாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version