ஆட்சியை எப்படியாவது பிடிக்க பொய் பேசுகிறார் ஸ்டாலின்!

திமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்த போது ஸ்டாலின் ஏன், மக்களை கண்டுகொள்ளவில்லை என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டில், மகளிர் சுய உதவிக் குழுவினருடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பில், பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, தாலிக்குத் தங்கம் உள்ளிட்டவற்றை அதிமுக அரசு நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினார். ஆட்சியில் இருக்கும் போது மக்களது பிரச்சனையை தீர்க்காத ஸ்டாலின், தேர்தல் வந்ததும் மக்களிடம் பொய் பேசுவதாக, முதலமைச்சர் விமர்சனம் செய்தார்.

 

மக்களோடு மக்களாக வாழ்வதால் தான், தன்னால், பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடிவதாக கூறிய முதலமைச்சர், கஷ்டங்களை அறியாத ஸ்டாலினால், எப்படி, மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

முதலமைச்சர் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக, சாலையோரம் நின்றிருந்த நரிக்குறவ இன தம்பதி, குழந்தைக்கு பெயர் வைக்கும்படி வேண்டுகோள் வைத்தனர். அதனை ஏற்று, குழந்தையை தனது கைகளில் ஏந்திய முதலமைச்சர், நிஷாந்தினி என பெயர் வைத்தார். முதலமைச்சரின் இந்த செயலால், நரிக்குறவ இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

 

Exit mobile version