கிராம சபை கூட்டத்தால் ஊர் ஊராய் அவமானப்படும் ஸ்டாலின்

”பேசனுமே அப்டின்னு பேசாத “ என்பது பிள்ளைப்பருவத்தில் நாம் எல்லோரும் கடந்து வந்த அறிவுரை. ஆனால் பாருங்கள் பாவம் மு.க ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பே இல்லை. அப்பா அருந்தமிழில் பேசினார். அதை வைத்து ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்தார். ஆனால் அதே பாணியை பின்பற்ற நினைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பாவம் தமிழ்ப்பாடல்கள் தான் வரமாட்டேன் என்கிறது என்று பார்த்தால் பழமொழிகளும் வரமாட்டேன் என்கிறது என்பதை அண்மைக்கால அவரது மேடைகள் காட்டின.

சரி மேடைப்பேச்சுத்தான் வரமாட்டேன் என்கிறது. விட்டு விடலாம் என்று இப்போதெல்லாம் கிராமப்புற பொதுமக்களை குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார் மு.க ஸ்டாலின். ஏற்கனவே ஒருமுறை நமக்கு நாமமே..ஆக..மன்னிக்கவும் நமக்கு நாமே என்றொரு பயணம் செய்து இளமை இருக்கிறது என்று காட்ட நினைத்தார். பேண்ட் சர்ட் அணிந்தார். சைக்கிள் ஓட்டினார். மருத்துவர் சொன்ன போதுமான தூரம் தாண்டி வாக்கிங் செய்தார். அதுவும் நடக்கவில்லை.

இப்போது மீண்டும் கிராமசபைக் கூட்டமாம், ஊர் ஊராக போய் தலைக்குத் தம்பிடி கொடுத்து கூட்டம் கூட்டி மக்களோடு மக்களாக பேசுகிறேன் பேர்வழி என்னும்பெயரில் பெருங்காமெடி செய்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே,
பூனை மேல் மதில் போல,
பூனை கண்ணைக் கட்டிக் கொண்டால் பபப்ப்பபபப்ப் பூனை… உலக உருண்டை…..

இவை எல்லாம் இவரது கைங்கர்யத்தால் தமிழுக்கு கிடைத்த புதுமொழிகள்.

இப்படித் தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொள்கிறார் என்று பாவப்பட்ட மக்கள் இவரை இப்போது தங்கள் பொறுப்பில் எடுத்து வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிராமசபைக்கூட்டம் தொடங்குகிறது. பேச ஆரம்பிக்கிறார். ஏதாவது உளறி விடுகிறார். மறைக்கவும் தெரியவில்லை. மேலும் அவமானப்படுகிறார், நமக்கே பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.

பரமக்குடி அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பகுத்தறிவு பேசுபவர், பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்ட செயல் கூட்டத்தில் அனைவரையும் முணுமுணுக்கச் செய்தது.

வாலாஜாபாத்தில், திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கேள்வி எழுப்பிய பொதுமக்களை, திமுக நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர், நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு குறைந்த அளவே மக்கள் கூடியதால் திமுகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

கீழடியில் தென்னை மரங்களை வெட்டி கிராம சபை கூட்டத்தை நடத்திய தி.மு.க.வினர், ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தங்கள் ஆடம்பரத்தை காட்டினர். இது எல்லாவற்றையும் விட திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ் என்பதற்கு பதில் சாமி என ஸ்டாலின் உளறிக் கொட்டியதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கூட தெரியாத ஒருவர் மாநிலத்தை ஆள ஆசைபடுவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதாக கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களின் விமர்சனமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில் தி.மு.க நடத்திய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உதயநிதி ஸ்டாலின் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அரசு மீது குறைக்கூறி பேசிய கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் மற்றும் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

திருவாரூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பார்லிமென்ட், ராஜ்யசபை என உளறினார் ஸ்டாலின். பார்லிமென்ட் டெல்லி இருக்கு, ராஜசபையும் டெல்லியில் இருக்கு என ஸ்டாலின் செம காமெடியாக பேசினார்.

ஆக, எதுக்காக இந்த கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரியாமல் ஊர் ஊராய் அசிங்கப்பபட்டு வருகிறார் ஸ்டாலின்.

Exit mobile version