மக்களின் பிரச்சனைகளை தீர்க்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுவரை தன்னை சந்திக்கவில்லை என்று முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக சின்னியம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், பொய்யான அறிவிப்புகளை கூறி, ஸ்டாலின் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரன், தற்போது துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.