ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களையே அவமதித்ததால், திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அரூரில் திமுக மக்களவை வேட்பாளர் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது வரவேற்பு கொடுக்க வந்த தொண்டர் ஒருவர் கட்சித் துண்டை அணிவிக்க முற்பட்டார்.
அதை அப்படியே பிடுங்கி, அருகில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டார் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து, ஒரு இஸ்லாமிய தொண்டர், ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வந்தார். அதையும் ஏற்காமல், பிடுங்கி பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்தார் ஸ்டாலின். இந்த செயல், அங்கு இருந்த திமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்தது.