நீர் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: தமிழிசை கண்டனம்

நீர் இல்லை என்று பேசுவதற்கு, ஸ்டாலினுக்கோ அல்லது திமுகவிற்கோ துளிக்கூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடும்கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967-ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட வீராணம் 37 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது திமுகவால் தான் என்றும், வீராணம் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து மக்களுக்கு நீர் கிடைக்காமல் தடுத்தது, திமுக என்றும் சாடினார். 2003-ம் ஆண்டு நீதிமன்றம் நதிநீர் இணைப்பின் நன்மைகளை சொன்னபோது, திமுக – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது பற்றி துளி கூட சிந்திக்காதது ஏன்? என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். நதிநீர் பிரச்னையைத் தீர்க்க திமுக எடுத்த தொலைநோக்குத் திட்டம் என்ன? என்று வினவிய அவர், தாகத்தையும் தவிப்பையும் பதவி தாகத்துக்கு பயன்படுத்தும் திமுக – காங்கிரஸ் மக்களுக்குச் செய்தது என்ன? என்றார். பல ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கெடுத்த திமுகவுக்கும் ஸ்டாலினும், நீர் இல்லை எனப்பேச துளி கூட உரிமை இல்லை என்றும் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version