ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை -அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்

ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி பேசியுள்ளார்.

அதிமுகவின் 47-வது தொடக்க விழா பொதுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஊழல் புகார் கூறி வரும் ஸ்டாலினை கடுமையாக சாடினார். ஊழலை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்.

தற்போது ஸ்டாலின் பேசி வருகிறார். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்யக்கூடியவர் கருணாநிதி என்று நீதிபதி சர்க்காரியா கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், எனவே ஸ்டாலினுக்கு ஊழலை பற்றி பேச அருகதை இல்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version