17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு நன்மை எதுவும் செய்யவில்லை என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரியில் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜனை அறிமுகம் செய்யும் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, திமுகவைப் பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசிய மதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார்.