ஒரு விவசாயி முதலமைச்சரானது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை : முதல்வர்

மு.க. ஸ்டாலின் எந்த காலத்திலும் வெற்றிபெற முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு விவசாயி தமிழகத்தின் முதலமைச்சராக வந்தது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து ஸ்டாலின் தூண்டி விட்டாலும் அரசு அதை வெற்றிகரமாக சமாளித்ததாக சுட்டிக்காடிய முதலமைச்சர், விவசாயம் பார்த்து முதலமைச்சராக உயர்ந்த தன்னை மிரட்டி பார்ப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும் என எச்சரித்தார்.

Exit mobile version