மோசடி பேர்வழிகள் எல்லாம் மோடியை மோசடி என்று சொல்லக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி மக்களவை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், என்ன சொன்னாலும், ஸ்டாலின் முதல்வராகவும், அவர் சிபாரிசு செய்யும் ராகுல் பிரதமராகவும் வரமுடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.