அரைகுறை அறிவிப்பு: பதவியேற்ற முதல்நாளே மக்களை ஏமாற்றிய ஸ்டாலின்

திமுக ஆட்சி என்றாலே சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே, கருணாநிதிக்கு பிறகு தற்போது முதலமைச்சராகி இருக்கும் ஸ்டாலினும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது.

ஆட்சியை பிடிக்கும் வெறியில் இருந்த திமுக தேர்தல் அறிக்கையில் நடைமுறைப்படுத்த முடியாத பலவற்றை தெரிவிப்பது வழக்கம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களை திமுக தலைமை அறிவித்ததே இதற்குச்சான்று. பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருந்தாலும், தற்போது பதவியேற்ற பின் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்துகளில் அறிவிப்பது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அரசு உள்ளுர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயண வசதி செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கான ஸ்டாலின் கையெழுத்திட்ட அரசாணையில் சாதாரண கட்டண நகரப் பேருந்தில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறப்படுள்ளது. பொதுவாக சாதாரண கட்டணம், விரைவு பேருந்து, சொகுசு பேருந்து என்று மாநகர அரசு பேருந்துகளில் 3 வகையாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் சாதாரன பேருந்து மூன்றில் ஒரு பங்குதான். எனவே கட்டணம் இல்லாமல் பயணிக்க பெண்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே தேர்தல் அறிக்கையில் கூறியது போல அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க வழி வகை செய்ய வேண்டும், அல்லது மாநகர அரசு பேருந்துகள் அனைத்தையும் சாதாரண பேருந்து என்று அறிவிக்க வேண்டும் என்பது மகளிரின் கோரிக்கையாக இருக்கிறது.

Exit mobile version