மாவட்ட அளவில் கூட கூட்டம் சேர்க்க முடியாதவர் ஸ்டாலின்

மாவட்ட அளவில் கூட்டம் சேர்க்க முடியாததால் கிராம அளவில் கூட்டத்தை சேர்க்கவே கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்துவதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் சாதனையை விளக்கும் வகையில் 1000 நபர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இந்தப் பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கஜா புயல் நிவாரண பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சி கவிந்து விழும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை மக்கள் நகைச்சுவையாக பார்த்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் உதயகுமார், மாவட்ட அளவில் கூட்டம் சேர்க்க முடியாததால் கிராம அளவில் கூட்டத்தை சேர்க்கவே கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்துவதாக விமர்சித்தார்.

Exit mobile version