தடையை மீறி கிராம சபை கூட்டத்தை நடத்தியதால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட 200 பேர் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் மீது அக்கறையில்லாத ஸ்டாலின், அரசின் உத்தரவையும் மீறி திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் ஸ்டாலின் தலைமையில் கிராமச் சபை கூட்டம் நடத்தினார். அப்போது உளறி(ரை)யாற்றிய ஸ்டாலின் நெல் கொள்முதல் என்ற வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் உளறிக் கொட்டினார்.
தி.மு.க.வினர் நடத்தும் கூட்டங்களால், கொரோனா பரவினால் யார் பொறுப்பு ஏற்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனிடையே, தடையை மீறி கிராம சபை கூட்டத்தை நடத்தியதாக ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட 200 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்