ஸ்டாலின் பிறந்த நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன – இலவு காத்தக் கிளி

திமுக தலைவர் பிறந்தநாளையொட்டி ஹாப்பி பர்த்டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கை வலைதளவாசிகள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், ட்விட்டரில் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்காக ஹாப்பி பர்த் டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கிய இணையதள வாசிகள் அதனை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். ஸ்டாலின் முதலமைச்சர் கனவு நிறைவேறப் போவதில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் ஹாப்பி பர்த் டே இலவுகாத்த கிளி என்ற ஹாஷ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version