ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு என்றுமே கனவு தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரைப்பட நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு என்றுமே கனவு தான் எனக் கூறினார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல்வேறு சோதனைகள் வந்தாலும், அதனை கடந்து அசைக்க முடியாத ஆட்சியாக அதிமுக உள்ளது என்றார்.

Exit mobile version