2ம் நிலைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது!

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.

இந்த பணிகளுக்காக, இணையதளம் வாயிலாக ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களில், தேர்வு செய்யப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேருக்கு சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது. தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version