சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா மற்றும் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
திருப்பத்தூர் தென்மாபட்டில் 36-வது புனித பட்டம் பெற்ற புதுமை விளங்கும் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு மூன்று நாள் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. தூய அமல அன்னை ஆலயப் பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதையடுத்து, ஏராளமான பெண்கள் அந்தோணியாருக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கிறிஸ்துவர்கள் மட்டும் அல்லாது திரளான இந்துக்களும் அந்தோணியாருக்குப் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்தனர். அதைத் தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சப்பரங்கள் வீதி உலா வந்தன.
முதல் சப்பரத்தில், புனித மைக்கேலும், இரண்டாவது சப்பரத்தில் அந்தோணியார் மற்றும் செபஸ்தியாரும் அமர்ந்து காட்சி அளித்தனர். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்று மதத்தினரும் அந்தோணியார் தேர் திருவிழாவில் பங்கேற்றனர்.