ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின் போது ஏற்பட்ட பெரும் வெடி சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் மாரிமுத்து என்பவரது நிலத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. நில உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாட்டு வெடி குண்டுகளை தயாரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.