பேரம் பேசி ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தடையில்லா சான்றிதழ் வழங்க தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியின் உயர் மாடி கட்டிடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலரை கல்லூரி பிரதிநிதி அணுகியுள்ளார்.

அலுவலர்கள் இருவரும் சேர்ந்து கூட்டாக ஆய்வு நடத்திய நிலையில், தடையில்லா சான்றிதழ் வழங்க வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவண குமாருக்கு லஞ்சம் வழங்க வேண்டும் என கூறி காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார், 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அவர் பேரம் பேசி லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version