கடலூர் மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல் மூட்டைகள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே, கள்ளிப்பாடி கிராமத்தில், சமீபத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் குறைந்த அளவிலான நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல்,
வியபாரிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகள் மட்டும் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகளை கொட்டி வைத்திருக்கும் நிலையில், அவை மழையில் சேதம் அடைவது தொடர் கதையாகிவிட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறைந்த அளவிலான நெல் மணிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், வேறு கொள்முதல் நிலையத்துக்கு செல்லுமாறு விரட்டுவதாகவும் புகார் கூறும் விவசாயிகள்,
இதில் அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post