நெல் கொள்முதல் நிலையம் வியாபாரிகளுக்கு மட்டுமா? விவசாயிகளின் நிலை??

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் வழங்கும் நெல் மூட்டைகளை மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து வீணாகியுள்ளன.

பேரூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், பத்தாயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

இந்த நிலையில், இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சிலர், தாங்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த நெல்லை எடுத்து வந்து, கொள்முதல் நிலையம் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேக்கமடைந்த நெல் மூட்டைகளை எடுக்க விடாமல் வியாபாரிகள் தடுத்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version