இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வலியுறுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ராஜேஷ், வசீகரன், முகமது ரிகாஸ் ஆகியோர் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டுப் புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்களின் தண்டனைக் காலம் முடிந்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இலங்கை திரும்ப முடியாமல் இருந்தனர். இந்நிலையில், தகவலறிந்த மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையச் செயலாளர் ஜெயந்தி, சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தின் உதவியுடன் மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.