இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக பூந்தமல்லியில் விசாரணை

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் 3 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21 ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் 3 பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியான ஹாசிம் என்பவரோடு இவர்கள் தொடர்பில் இருந்ததாக கேரளாவை சேர்ந்த ரியாஸ் என்பவர் தகவல் அளித்திருந்தார். இதனடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version