இலங்கையின் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 200 சந்தேக நபர்கள் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறினார். அவர்கள் தவிர, ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பலர் விசாரணைக்கு பின்னர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயினும் கைதுகளும், விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார். மேலும், இலங்கையில், தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இனி அச்சமின்றி இலங்கைக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்தார்.