உலகக் கோப்பையின் 27 வது லீக் ஆட்டத்தில், மலிங்காவின் அசத்தல் பந்து வீச்சால் இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கருணாரத்னே ஒரு ரன்னிலும், குசல் பெரேரா இரண்டு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தொடக்கத்தைத் தந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெர்னாண்டோ, குசல் மெண்டிசுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 ரன்கள் எடுத்த நிலையில் பெர்ணாண்டோ ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 46 ரன்களிலும், சில்வா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 85 ரன்களுடனும், பிரதீப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது.