32-வது FIFA மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இன்று தொடக்கம்!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி:

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. 32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது இன்று நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில்  தொடங்குகின்றது. மேலும் இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்து – நார்வே அணிகள்  களமிறங்குகின்றனர்.  பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஒன்பதாவது முறையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்து இணைந்து நடத்துக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கால்பந்து போட்டியானது இன்று தொடங்கி ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் களந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்று உள்ளன.  இந்த அணியில் பிரிக்கப்படு உள்ள அணியானது லீக் சுற்றில் அதே பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடம் மோதுகின்றன.

32-வது பிஃபா மகளிர் கால்பந்து:

இந்த லீக் சுற்றில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறும் அணிகள்  அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெறுவார்கள். இந்த வகையில் இந்த நாக் அவுட் சுற்றானது ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 8-ம்தேதி வரை நடைப்பெற உள்ளன.  மேலும் இந்த சுற்றின் முடிவில்  எட்டு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.  மேலும் இந்த கால் இறுதி சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 12-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியின் இறுதி சுற்றானது ஆகஸ்ட் 20-ம் தேதி சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறு மைதானங்களில் உலகக் கோப்பை கால்பந்து தொடரானது நடைபெற உள்ளது. மகளிர் கால்பந்து போட்டியின் தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து – நார்வே அணிகள் களமிறங்குகின்றன. இதில் நார்வே அணி உலக கோப்பை கால்பந்து போட்டியில்  ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version