இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளதால், அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.
நாடாளுமன்றம் கூடியதும், ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்ச வெளிநடப்பு செய்தார். ஆனாலும், ராஜபக்சவுக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் வாக்களித்ததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்ச பிரதமர் பதவியை இழந்துள்ளார்.