அரியலூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற இந்தக் கோவிலில், மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமிகள் திருவீதி உலாவும், பதினெட்டாம் நாளில் மாசிமகத் தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.