திருவையாறு ஸ்ரீதியாகராஜரின் 172வது ஆராதனை விழா

தஞ்சை திருவையாறு ஸ்ரீதியாகராஜரின் 172வது ஆராதனை விழாவின் 4ம் நாளில் பிரபல பின்னணி பாடகர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் ஆன்மீக ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனை விழாவில் இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான 172வது ஆராதனை விழா கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தியாகராஜரின் புகழை போற்றும் வகையில் பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், பிரபல பின்னணி பாடகி மஹதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version