புகழ்பெற்ற ஸ்ரீசௌமியா நாராயண பெருமாள் கோயிலில் மாசிமாத விழாவையொட்டி தெப்பத் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமியா நாராயண பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் மகா நட்சத்திரம் அன்று தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா விமர்சையாக தொடங்கியது. 11 நாள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதனைத்தொடர்ந்து 10ம் நாளாக தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சோசியர் குளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் அமர்ந்து பகலில் ஒரு சுற்றும், இரவில் இரண்டு சுற்றும் சுற்றி வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.