சூடுபிடிக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி 16 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி 29 இடங்களில் போட்டியிடுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, வன்னி, மன்னார், வவுனியா உள்ளிட்ட இடங்கள் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகள் ஆகும். எனினும் தமிழ் தேசியக் கூட்டணி மீது ஈழத்தமிழர்கள் அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. உள்நாட்டு போர் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்தும், தங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டு. மேலும், ஈழத்தமிழர்களுக்கு தனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த நாடாளுமன்ற தேர்தல், தமிழ் தேசிய கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version