இலங்கை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைதாக வாய்ப்பு

இலங்கையில் 11 தமிழ் மாணவர்கள் மாயமான வழக்கில் கடற்படை முன்னாள் தளபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நடந்த இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடந்து வரும் நிலையில் ,இலங்கை கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரி சந்தன பிரசாத் எட்டியாராச்சி, நிலந்த சம்பத் முனசிங்க, செய்தி தொடர்பாளர் டி.கே.பி. தசநாயக்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி நிலந்த சம்பத் முனசிங்க தாக்கல் செய்த மனுவுக்கு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வசந்த கரன்னாகொடாவை கைது செய்ய புலனாய்வு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version